Saturday, April 4, 2009
[]"வணங்கா மண்" கப்பலுக்கான பொருட்கள் சேகரிப்பு
சுவிட்ஸர்லாந்தில் "வணங்கா மண்" கப்பலுக்கான பொருட்கள் சேகரிப்பு [ சனிக்கிழமை, 04 ஏப்ரல் 2009, 12:09.26 PM GMT +05:30 ] வணங்கா மண் நடவடிக்கைக்காக சுவிஸின் அனைத்து மாநிலங்களிலும் பொருட்கள் பணம் சேகரிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. வன்னியில் உள்ள எமது அல்லல்படும் உறவுகளுக்காக உதவி செய்ய விரும்புபவர்கள் உங்கள் உதவிகளை பொருட்களாகவோ அல்லது பணமாகவோ 07.04.2009 மாலை 8 மணிக்கு முன்பதாக தரலாம் என சுவிஸ் வணங்கா மண் ஒருங்கிணைப்பு குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர். கீழ் காணும் பொருட்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்பதனை தெரிவித்துக் கொள்கின்றோம். உணவுப் பொருட்கள் 1. குழந்தைகளுக்கான உடனடி உணவுப் பொருட்கள். ( ரின்னில் அல்லது போத்தலில் அடைக்கப்பட்டவை) 2. குழந்தைகளுக்கான பால்மா வகைகள். 3. வளர்ந்தவர்களுக்கான ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பொருட்கள். 4. சோயா வகையைச் சேர்ந்த உணவுகள். 5. நூடில்ஸ் வகைகள் 6. தகரத்தில் அடைக்கப்பட்ட பழவகைகள், உணவுகள். 7. காலை உணவுக்கான உலர் உணவுகள். செறியல் கான்பிளக்ஸ் போன்றவை. 8. ஊட்டச்சத்து நிறைந்த மென்பானம். 9. ஊட்டச்சத்து நிறைந்த பிஸ்கட் வகைகள். 10. சூப் வகைகள். மருத்துவப் பொருட்கள் 1. பன்டேஜ் வகைகள். 2. டிஸ்பிரின், அஸ்பிரின், பனடோல், வைட்டமின் மாத்திரைகள். 3. நோவுக்குப் போடும் தைல வகைகள். 4. பருத்தித் துணி வகைகள். காயங்களைச் சுற்றிக்கட்ட பஞ்சு வகைகள். 5. தண்ணீர் சுத்திகரிக்கும் குளிகைகள். 6. தண்ணீர் சுத்திகரிக்கும் பில்ரர் குறிப்பு: பொருட்கள் காலாவதியாகும் திகதி குறைந்தது ஒரு வருடம் இருக்க வேண்டும். வணங்கா மண் ஏற்பாட்டுக் குழு: 076 302 88 15, 041 360 88 21, 062 842 20 95, 079 369 72 18, 078 305 66 30 ......................... பிரான்சில் வணங்கா மண் பயணத்திற்கான பொருட்கள் சேகரிப்பு திகதி: 03.04.2009 // தமிழீழம் // [பாண்டியன்] வணங்கா மண் நடவடிக்கைகாக பிரான்சிலும் பொருட்கள் சேகரிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பிரான்சின் அனைத்து பிராந்தியங்களிலும் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வன்னியில் உள்ள உறவுகளுக்க உதவி செய்ய விரும்புவர்கள் உங்கள் உதவிகளை பொருளாகவோ பணமாகவோ வெகு விரைவாக வழங்குங்கள். 03.04.2009 வெள்ளிக்கிழமை முதல் - 08.04.2009 புதன்கிழமை வரை காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை வழங்கவேண்டிய இடங்கள் 1. சிப்பி மண்டபம் Chippy 12 Av Jules Ferry 93140 Bondy 2. அருள்மிகு முத்துமாரி அம்மன் ஆலயம் 26 Rue de Departement 75010 Paris உங்கள் பகுதிகளில் உள்ள தமிழ் சங்கங்களூடாக தொடர்பு கொண்டும் பொருட்களை வழங்கலாம். பொருட்களாக வழங்க விரும்பினால் கீழுள்ள பொருட்களே ஏற்றுக்கொள்ளப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம். உணவுப் பொருட்கள் குழந்தைகளுக்கான உடனடி உணவுப் பொருட்கள் (ரின் அல்லது போத்தல்) குழந்தைகளுக்கான பால்மா வகைகள் வளர்ந்தவர்களுக்கான ஊட்டச்சத்து நிறைந்த உணவு வகைகள் சோயா வகையைச் சேர்ந்த உணவுகள் நூடில்ஸ் வகைகள் ரின் பழ வகைகள் சீனி மரக்கறி எண்ணைய் வகைகள் காலையுணவாக உண்ணக்கூடிய உலர் உணவுகள் (செறியல், கான்பிளக்ஸ் போன்ற) ஊட்டச்சத்து நிறைந்த மென்பானம் உட்டச்சத்து நிறைந்த பிஸ்கற் வகைகள் மருத்துவப் பொருட்கள் பன்டேச் வகைகள் விட்டமின் குளிசைகள் தண்ணீர் சுத்திகரிக்கும் குளிசைகள் தண்ணீர் பில்ரர் பனடோல் போன்ற வலி நிவாரணி மருந்துகள் (ஐஸ்பிரின், டொலிபிரான்) பருத்தித்துணி வகைகள் (கொட்டன்) பச்சை, கறுப்பு தவிரந்தவை குறிப்பு - பொருட்கள் காலவதியாகும் திகதி குறைந்தது ஆறு மாதங்களாக இருத்தல் வேண்டும். மேலதிக தகவல்களுக்கும் தொடர்புகளுக்கும் ஏற்பாட்டுக்குழு 06 34 89 91 03 ................ டென்மார்க்கில் தாயக உறவுகளுக்காக உலர் உணவுகள் மற்றும் நிதி சேகரிப்பு [ வெள்ளிக்கிழமை, 03 ஏப்ரல் 2009, 12:32.08 PM GMT +05:30 ] ஐரோப்பாவிலிருந்து வணங்காமண் புறப்படுவதற்கு தயாராக உள்ள நிலையில், டென்மார்க் வாழ் தமிழ் உறவுகளிடமிருந்தும் உலர் உணவுகள் மற்றும் நிதி உதவி என்பன எதிர்பார்க்கப்படுகின்றன. நாளை 4ஆம் திகதி சனிக்கிழமை, நாளை மறுதினம் 5ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாட்களிலும் உலர் உணவு மற்றும் நிதி சேகரிப்பு இடம் பெறவுள்ளது. நீங்கள் இவற்றினை வீடு தேடிவரும் தொண்டர்களிடமோ அல்லது இதற்கென எம்மால் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்திலோ ஒப்படைத்துக் கொள்ளலாம். தொடர்புகளுக்கு. 0045 31 85 10 40 0045 20 87 18 28 உலர் உணவு பெறுவதற்கு ஒழுங்கமைக்கப்பட்டுள்ள இடங்களின் முகவரி Østerbrogade .43 7100 Vejle Skolegade 48 7400 Herning நிதி வழங்குவதாயின் குறிப்பிடப்பட்டுள்ள வங்கி இலக்கத்தில் வைப்பிடவும். Nordia Bank:9602-6882-584-753 ......................................... நோர்வேயில் வன்னி மக்களுக்கு அவசர உலர் உணவுசேகரிக்கும் செயற்பாடு திகதி: 03.04.2009 // தமிழீழம் // [பாண்டியன் ] சிறிலங்கா பயங்கரவாத அரசின் இன அழிப்பு வன்போரினால், வன்னியில் சொல்லொணா மனித அவலங்களுக்கு முகம் கொடுக்கும் எங்கள் தொப்புள் கொடி உறவுகளுக்கான உலர் உணவு அனுப்பும் செயற்பாடு புலம்பெயர் தமிழர்களால் முன்னெடுக்கப்படுகின்றமை அனைவரும் அறிந்ததே. நோர்வே தழுவிய ரீதியில் உலர் உணவு சேகரிப்பு 04.04.2009 சனிக்கிழமை மட்டுமே இந்த அவசர செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது. 'அன்னை பூபதி தமிழ்க் கலைக் கூட வளாகங்களில்' சனிக்கிழமை காலை 09.00 மணியிலிருந்து உலர் உணவு வகைகள் சேகரிக்கப்படவுள்ளன. மரணத்துள் வாழும், மனித அவலத்திற்குள் வாழும் எங்கள் உறவுகளை பட்டிணிச் சாவிலிருந்து மீட்பதற்கும், காப்பதற்கும் நாம் அவசரமாக செயற்பட வேண்டிய அவசியத்தை உணர்ந்து, இத்திட்டத்திற்கான உங்கள் பங்களிப்பை வழங்குமாறு உரிமையோடு கேட்டுக் கொள்கின்றோம்! எதிர்பார்க்கப்படுகின்ற உலர் உணவு வகைகள்: MATVARER TIL NØDHJELPSENDING TIL TAMILER TUNFISK, MAKRELL, SADINER SUPPE (ALLE TYPER) KNEKKER BRØD BP 100 FULLKORN KJEKS § KORNFLEKS (HAVRRE, MAIS, FULLKORN) KJØTT I BOKSER(SKINKE, KYLLING) BOKS OST RETT I KOPPEN MELKEPULVER TØRKETFRUKT, NØTTER NESKQUICK MED MELK BARNEGRØT MELKETYPER KOKOS (PULVER) SYLTETØY(KUVER) NB: VARIGHETEN TIL ALLE MATVARER MÅ VÆREMINST 2 ÅR. VI UNNGÅR GLASSBOKSER Vi VIL GJERNE HA VARER I STROREMENGDER. SE VDLEGG OGSÅ ................................................ உலகத்தமிழர்களுக்கு ஓர் அவசர வேண்டுகோள்! திகதி: 24.03.2009 // தமிழீழம் // [பாண்டியன்] புலம்பெயர் தமிழ் உறவுகளால் முன்னெடுக்கப்படும் மனிதாபிமான முயற்சியில் கடந்த சில நாட்களாக நடைபெறும் பொருட் சேகரிப்பில் தாம் எதிர்பார்த்தைவிட அதிகமான உணவுப் பொருட்கள் சேர்ந்துள்ளதாக "வணங்கா மண்"ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர். ஆனால் குண்டு மழையினால் அல்லலுறும் மக்களுக்கு மிகவும் அத்தியாவசியமான சத்திரசிகிச்சை மருந்துக்கள் மற்றும் அதற்கான உபகரணங்கள் கொள்முதல் செய்ய பெருமளவு நிதி தேவைப்படுகிறது. அத்தோடு கப்பல் செலவும் குறிப்பிடும்படியாக உள்ளது. "ஆகவே இந்த முயற்சியில் உலகத் தமிழர்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியுள்ளது." எனக் குறிப்பிடும் ஏற்ப்பாட்டாளர்கள் நிதியுதவி செய்யப் பின்வரும் இலக்கங்களினூடாக அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். "வணங்கா மண்"ஏற்பாட்டுக் குழு இலண்டன் Call Centreopen from 9 AM to 9 PM ( GMT) London Time 00 44 (0)20 3393 6650 00 44 (0)84 5527 7155 or Pay online at www.vannimission.org
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment