யேர்மனி, பிரான்ஸ், சுவிஸ், நோர்வே, கனடா, சுவீடன், இத்தாலி, பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு மக்களுக்கு அழைப்பு
[ செவ்வாய்க்கிழமை, 07 ஏப்ரல் 2009, 06:56.44 AM GMT +05:30 ]
யேர்மனி, பிரான்ஸ், சுவிசிஸ், நோர்வே, பாரிஸ், பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள போராட்டத்திற்கு அனைத்து தமிழ் மக்களின் ஆதரவையும் போராட்டத்தில் பங்கேற்றுள்ள மக்கள் கோரி நிற்கின்றார்கள்.
இத்தாலி வாழ் எம் தேசத்தின் உறவுகளே!சுவிசிஸ் ஐ.நா முன்பாக இன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் தமிழீழ மக்களின் வாழ்வுரிமையை வலியுறுத்தி சுவிற்சர்லாந்து ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபை முன்பாக இன்று (செவ்வாய்) மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
வன்னியில் தமிழ் மக்கள் மீதான சிறீலங்கா அரசின் தாக்குதல்கள் தடுத்து நிறுத்தப்பட்டு நிரந்தர போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.
பிற்பகல் 2:00 மணிக்கு ஆரம்பிக்கவுள்ள ஆர்ப்பாட்டம் காலத்தின் தேவை கருதி சில வேளைகளில் காலவரையறையற்ற போராட்டமாக மாறும் என்பதால் தமிழ் உறவுகள் அதற்கான முன்னேற்பாடுகளுடன் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர் நாடுகளில் மக்கள் தமிழினப் படுகொலைக்கு எதிராக ஆரம்பித்துள்ள தன்னெழுச்சிப் போராட்டங்கள் வலுப்பெற்றுவரும் நிலையில், அதிகளவிலான தமிழ் மக்கள் இவற்றில் கலந்துகொள்ள வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
யேர்மனியில் இன்று முதல் காலவரையறையற்ற போராட்டம் யேர்னியில் டுசுல்டோர்ப் பிரதான தொடரூந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11:00 மணி முதல் காலவரையறையற்ற ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
வன்னியில் பாரிய மனித அவலத்தின் மத்தியில் தமிழின அழிப்பை மேற்கொண்டுவரும் சிறீலங்கா அரசுக்கு யேர்மனி அரசாங்கம் அழுத்தம் கொடுத்து போரை தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.
ஈழத்தமிழ் மக்களைக் காப்பாற்றுமாறு புலம்பெயர் நாடுகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ள காலவரையறையற்ற போராட்டங்களின் வரைசையில் யேர்மனியிலும் நடைபெறவுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் பெருமளவில் கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனி டுசல்டோவ் நாடாளுமன்றத்திற்கு (düsseldorf landtag) முன்பாக (தொடர்புகளுக்கு: (49) 1633125311)
நோர்வேயில் பிரதமர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் வன்னி மக்களின் அவலத்தைத் தடுத்து உடனடி போர் நிறுத்தம் செய்யுமாறு வலியுறுத்தி நோர்வே பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது.
பிரதமர் தனது அலுவலகத்திற்கு முன்பாக காலை 10:00 மணியளவில் மக்கள் ஒன்றுகூடுமாறு நோர்வே தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.
வன்னியிலுள்ள பாதுகாப்பு வலயம் மீது சிறீலங்கா படையினர் தாக்குதல் நடத்த முற்படுவதாக தகவல் வெளியாகி இருப்பதுடன், அவ்வாறு தாக்குதல் நடத்தினால் பல இலட்சக்கணக்கில் மக்கள் உயிரிழக்க நேரிடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சிறீலங்கா அரசு மீதான அனைத்துலக அழுத்தம் உடனடியாகப் பிரயோகிக்கப்பட்டு போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் எனவும், இதற்காக புலம்பெயர் தமிழ் மக்கள் கிழர்ந்தெழ வேண்டும் எனவும், தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் நேற்று முன்னாள் (ஞாயிற்றுக்கிழமை) அழைப்பு விடுத்திருந்தமை நினைவூட்டத்தக்கது.
இது தொடர்பாக நோர்வே தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:-
எமது இனத்தை கொடிய அழிவில் இருந்து காத்திட, உடனடிப் போர் நிறுத்தத்தினை ஏற்படுத்துவதற்கு நோர்வே அரசாங்கம் உரிய உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்த அணி திரள்வோம்.
எமது சொந்த அலுவல்களை நாளை ஒதுக்கி வைத்து எங்கள் உறவுகளுக்காக குரல் கொடுப்போம். அனைவரும் வீதிக்கு இறங்குவோம் என்று அச்செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(தலைமை அமைச்சர் அலுவலகமானது, VG நாளிதழ் அலுவலகம் மற்றும் Deichmanske bibliotek (தலைமை நூலகம்) ஆகியன அமைந்துள்ள இடத்திற்கு அருகாமையில் Akersgata 42, 0030 OSLO முகவரியில் அமைந்துள்ளது)
பாரிஸ் நகரின் இன்வலிட் என்னும் இடத்தில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சின் முன்றலில் நேற்று பிற்பகல் 3:00 மணியில் இருந்து ஒன்றுதிரண்ட தமிழர்கள் அதனை தொடர் போராட்டமாக மாற்றி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரெஞ்சு அரசாங்கம் முடிவு ஒன்றினை தெரியப்படுத்தும் வரை ஆர்ப்பாட்டம் நடக்கும் இடத்தை விட்டு நகர்வதில்லை என்ற உறுதிப்பாட்டுடன் மக்கள் முழக்கங்களை எழுப்பியபடி எழுச்சியுடன் காணப்படுவதாக எமது செய்தியாளர் அங்கிருந்து தெரிவித்துள்ளார்.
லண்டனில் தொடர்கிறது போராட்டம் இதேவேளையில் பிரித்தானியாவின் பல பகுதிகளிலும் இருந்து நேற்று திங்கட்கிழமை கிளர்ந்தெழுந்த தமிழ் மக்கள், வெஸ்ட் மினிஸ்டர் நாடாளுமன்ற முன்றலில் தொடர்ச்சியாக மகிந்த அரசாங்கத்தின் தமிழின இனப் படுகொலைக்கு எதிராக முழக்கம் எழுப்பி வருகின்றனர்.
கனடாவில். கனடிய தமிழ் மாணவர் சமூகம், கனடிய தமிழர் சமூகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த போராட்டம் ஒட்டாவாவில் அமைந்திருக்கும் கனடிய நாடாளுமன்றம் முன்பாக நடைபெறவுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் குறித்து ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளதாவது:
சிறிலங்கா அரசாங்கத்தின் கொடூர இனப்படுகொலையை உடன் நிறுத்தக் கோரியும்
உடனடிப் போர் நிறுத்தம் வேண்டியும்
சிறிலங்கா அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்குமாறும் கனடிய அரசையும் கனடிய பிரதமர் ஸ்டீபன் காப்பரையும் வலியுறுத்தும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12:00 மணி தொடக்கம் நாள்தோறும் தொடர் போராட்டத்தில் அனைத்துத் தமிழ் மக்களும் இணைந்து கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.
நாள்தோறும் காலை 7:00 மணிக்கு 1199 கென்னடி வீதியில் அமைந்திருக்கும் எவரெஸ்ட் Banquet மண்டபத்தில் இருந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளும் மக்களுக்கு உரிய பேருந்துகள் புறப்படவுள்ளன.
பேருந்துகளில் பயணிக்க விரும்புகின்றவர்கள் கீழ்க்காணும் தொடர் எண் வாயிலாக பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
சுயமாக வாகன வசதி கொண்டவர்கள் அதனைப் பயன்படுத்துமாறும் வேண்டப்படுகின்றனர்.
பேருந்துகள் புறப்படும் ஏனைய இடங்கள் பின்னர் அறியத் தரப்படும்.
பேருந்துப் பதிவுகளுக்கு: 416 825 6020
ஏனைய தொடர்புகளுக்கு: 647 838 6925
சுவீடனில் சுவீடன் வெளிவிவகார அமைச்சு அலுவலகத்துக்கு முன்பாக தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது.
இந்த கவனயீர்ப்பு போராட்டம் தொடர்பாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளதாவது:
எமது தாயக உறவுகளை சிறிலங்கா அரசாங்கம் நடத்தும் இன அழிப்பு போரில் இருந்து இருந்து காக்க, சுவீடன் வெளிவிவகார அமைச்சுக்கு முன்பாக தொடர் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளது.
இத்தாலி வாழ் எம் தேசத்தின் உறவுகளே! இனவாத அரசின் எறிகணை வீச்சிலும் எரிகுண்டு வீச்சிலும் எம்தேசமும் தேசத்தின் உறவுகளும் எரிந்து கொண்டிருக்கிறார்கள். அழிவுகளைக் கண்டு அழுது கொண்டிருக்கும் நேரமல்ல இது. வீதியில் இறங்கி குரல் கொடுத்து எம் மக்களை பாதுகாக்க சர்வதேசத்தின் முன் இறுதியாக ஒங்கி குரல் கொடுக்கும் இறுதிக்கணம் இது.
எம் தாயகத்தையும் தேசியத்தையும் சுதந்திரத்தையும் தாயகத்து உறவுகளையும் இழந்து நாம் தமிழர்களாக வாழ முடியுமா? தமிழர்கள் வாழும் புலம்பெயர் தேசம் எங்கும் மக்கள் வீதியில் இறங்கி போராடும் இவ்வேளையில் இத்தாலி வாழ் தமிழீழ மக்களாகிய நாமும் இன்றே வீதிகளில் இறங்கி தொடர்ந்து குரல் கொடுப்போம். தேசத்தை அழிவில் இருந்து காப்போம்.
இடம் : பியாட்சா இன்டிபென்டென்சா
நேரம் : 15:00 மாலை
காலம் : 07-04-2009
அனைவரும் அணிதிரண்டு வாருங்கள்.
சாவுக்குள் வாழும் எம் சந்ததிகளை காக்க.
பலெர்மோ வாழ் தமிழீழமக்கள
இன்று பிற்பகல் 2:00 மணியில் இருந்து தொடர்ச்சியாக இப்போராட்டம் நடைபெறவிருக்கின்றது.
இதில் சுவீடன் வாழ் அனைத்து தமிழ் மக்களையும் குடும்பம் குடும்பமாக வந்து கலந்துகொள்ளுமாறு அழைக்கின்றோம்.
[www.tamilwin.com]
Tuesday, April 7, 2009
[]தமிழினப் அழிப்பை தடுத்து நிறுத்த வலியுறுத்தி கனடா, ஜேர்மனி,பிரிட்டிஷ், பிரான்சில் தொடர் போராட்டத்திற்கு அழைப்பு
தமிழினப் அழிப்பை தடுத்து நிறுத்த வலியுறுத்தி கனடா, ஜேர்மனி, பிரான்சில் தொடர் போராட்டத்திற்கு அழைப்பு
[செவ்வாய்க்கிழமை, 07 ஏப்ரல் 2009, 09:05 மு.ப ஈழம்] [பா.பார்த்தீபன்]
சிறிலங்கா அரசாங்கத்தினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் தமிழினப் படுகொலையை அனைத்துலக சமூகம் தடுத்து நிறுத்தி அங்கு நிரந்தரப் போர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் வேண்டும் என்று வலியுறுத்தி கனடா, ஜேர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் மாபெரும் தொடர் மக்கள் எழுச்சி போராட்டங்கள் இடம்பெறவுள்ளன.
இந்த மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் புலம்பெயர் தமிழ்மக்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்திருக்கின்றனர்.
கனடாவில்...
கனடிய தமிழ் மாணவர் சமூகம், கனடிய தமிழர் சமூகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த போராட்டம் ஒட்டாவாவில் அமைந்திருக்கும் கனடிய நாடாளுமன்றம் முன்பாக நடைபெறவுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் குறித்து ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளதாவது:
சிறிலங்கா அரசாங்கத்தின் கொடூர இனப்படுகொலையை உடன் நிறுத்தக் கோரியும்
உடனடிப் போர் நிறுத்தம் வேண்டியும்
சிறிலங்கா அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்குமாறும் கனடிய அரசையும் கனடிய பிரதமர் ஸ்டீபன் காப்பரையும் வலியுறுத்தும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12:00 மணி தொடக்கம் நாள்தோறும் தொடர் போராட்டத்தில் அனைத்துத் தமிழ் மக்களும் இணைந்து கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.
நாள்தோறும் காலை 7:00 மணிக்கு 1199 கென்னடி வீதியில் அமைந்திருக்கும் எவரெஸ்ட் Banquet மண்டபத்தில் இருந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளும் மக்களுக்கு உரிய பேருந்துகள் புறப்படவுள்ளன.
பேருந்துகளில் பயணிக்க விரும்புகின்றவர்கள் கீழ்க்காணும் தொடர் எண் வாயிலாக பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
சுயமாக வாகன வசதி கொண்டவர்கள் அதனைப் பயன்படுத்துமாறும் வேண்டப்படுகின்றனர்.
பேருந்துகள் புறப்படும் ஏனைய இடங்கள் பின்னர் அறியத் தரப்படும்.
பேருந்துப் பதிவுகளுக்கு: 416 825 6020
ஏனைய தொடர்புகளுக்கு: 647 838 6925
ஜேர்மனியில்...
சிறிலங்கா அரசாங்கத்தின் தமிழின படுகொலையைத் தடுத்து நிறுத்த ஜேர்மனிய அரசாங்கம் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஜேர்மனி வாழ் தமிழ் மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம் குறித்து ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளதாவது:
ஜேர்மனி டுசல்டோவ் நாடாளுமன்றத்திற்கு (düsseldorf landtag) முன்பாக இன்று முற்பகல் 11:00 மணி தொடக்கம் தமிழினப் படுகொலையை உடன் தடுத்து நிறுத்த ஜேர்மனிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி கோரி முற்றுகைப் போராட்டம் நடைபெறவுள்ளது.
எனவே யேர்மன் வாழ் அனைத்து தமிழ் உறவுகளும் கலந்து கொண்டு எமது பலத்தை ஜேர்மனிய அரசிற்கு எடுத்துக்காட்டும் படி கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்புகளுக்கு: (49) 1633125311
பிரான்சில்...
சிறிலங்கா அரசாங்கத்தின் இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்தக் கோரி பிரான்சில் உள்ள புலம்பெயர் தமிழ்மக்களால் நேற்று திங்கட்கிழமை மாலையில் தொடங்கப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சகத்தின் முன்றலில் நடைபெற்று வரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பிரான்ஸ் வாழ் தமிழர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டம் குறித்து தெரிய வருவதாவது:
சிறிலங்கா அரசாங்கத்தின் தமிழினப் படுகொலை தீவிரமடைந்துள்ள நிலையில் அதனை தடுக்கும் வகையில் போர்நிறுத்தம் கோரி பிரான்ஸ் வாழ் ஈழத் தமிழர்கள் வெளிவிவாகர அமைச்சின் முன்றலில் ஆயிரக்கணக்கில் திரண்டு ஆர்ப்பாட்ட ஒன்றுகூடலை நடத்தி வருகின்றனர்.
பாரிஸ் நகரின் இன்வலிட் என்னும் இடத்தில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சின் முன்றலில் நேற்று பிற்பகல் 3:00 மணியில் இருந்து ஒன்றுதிரண்ட தமிழர்கள் அதனை தொடர் போராட்டமாக மாற்றி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரெஞ்சு அரசாங்கம் முடிவு ஒன்றினை தெரியப்படுத்தும் வரை ஆர்ப்பாட்டம் நடக்கும் இடத்தை விட்டு நகர்வதில்லை என்ற உறுதிப்பாட்டுடன் மக்கள் முழக்கங்களை எழுப்பியபடி எழுச்சியுடன் காணப்படுவதாக எமது செய்தியாளர் அங்கிருந்து தெரிவித்துள்ளார்.
இதேவேளையில் பிரித்தானியாவின் பல பகுதிகளிலும் இருந்து நேற்று திங்கட்கிழமை கிளர்ந்தெழுந்த தமிழ் மக்கள், வெஸ்ட் மினிஸ்டர் நாடாளுமன்ற முன்றலில் தொடர்ச்சியாக மகிந்த அரசாங்கத்தின் தமிழின இனப் படுகொலைக்கு எதிராக முழக்கம் எழுப்பி வருகின்றனர்.
[www.puthinam.com]
பிரிட்டிஷ் பாராளுமன்ற முன்றலில் மாபெரும் ஆர்ப்பாட்டம்(பட இணைப்பு)
வீரகேசரி இணையம் 4/7/2009 11:00:11 AM - இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல் சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், உடனடி போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் பிரித்தானிய நாடாளுமன்ற முன்றலில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ஒன்று திரண்டு மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் நேற்று திங்கட்கிழமை முதல் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் 3000க்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் சிறுவர்கள் என பலர் கலந்து கொண்டனர் பாராளுமன்ற அமர்வில் தற்போது கலந்து கொண்டிருக்கும் பிரித்தானிய அமைச்சர்கள் அல்லது உறுப்பினர்களில் எவராவது வெளியே வந்து தமது கோரிக்கைக்குப் பதிலளிக்கும் வரை பாராளுமன்ற முன்றலில் தொடர்ந்து இருக்கப் போவதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.
அதேவேளை இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் 1000 மேற்பட்டோர் தொடர்ந்தும் அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக மேலும் பலர் பிரித்தானியாவின் வெவ்வேறு இடங்களில் இருந்தும் பாராளுமன்ற முன்றலை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டர்வகளில் சிலர் அருகிலுள்ள தேம்ஸ் நதியில் குதிக்கப் போவதாக அச்சுறுத்தியதையடுத்து அங்கே 4 உயிர்காப்பு படகுகள் கண்காணிப்புக்காக அமர்த்தப்பட்டதாகவும், எனினும் ஒருவர் குதிக்க முற்பட்ட சமயம் அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்து உள்ளதாகவும் சர்வதேச செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
பிரித்தானிய பாராளுமன்றத்தில் தற்போது உள்நாட்டு விவகாரம் தொடர்பான விவாதம் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. நேற்று திங்கட்கிழமை தமிழ் மாணவர்கள் மேற்கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தினால் பாராளுமன்றத்தைச் சூழவுள்ள பிரதான வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானிய பொலிஸார் வாகனங்களைப் பாராளுமன்றத்திற்கு முன்னால் உள்ள வீதிகளை நோக்கி வரவிடாமல் வேறு வீதிகளினால் திருப்பி விடுகின்றனர். அத்துடன் ஆர்ப்பாட்டத்திற்கும் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

[]ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக சென்னையில் தீக்குளித்த தூத்துக்குடி முத்துக்குமரன்
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக சென்னையில் தீக்குளித்த தூத்துக்குடி முத்துக்குமரன் மரணம்
[ வியாழக்கிழமை, 29 சனவரி 2009, 08:49.48 AM GMT +05:30 ]
இலங்கையில் ஈழத்தமிழர் பிரச்சனை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதை வலியுறுத்தி தூத்துக்குடியைச் சேர்ந்த வாலிபர் முத்துக்குமரன் சென்னையில தீக்குளித்து மரணமானார்
இலங்கை ராணுவத்தால் அப்பாவி ஈழத்தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்தும், ஈழத் தமிழர் பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர வலியுறுத்தியும் சென்னையில் இன்று காலையில் தீக்குளித்த இளைஞர், மருத்துவமனையில் மரணமடைந்தார்.
தூத்துக்குடியைச் சேர்ந்த முத்துக்குமரன் (28) எனும் இளைஞர் சென்னை நுங்கம்பாக்கத்தில் மத்திய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள சாஸ்திரி பவனுக்கு இன்று காலை 10 லிட்டர் மண்எண்ணெய் கேனுடன் வந்துள்ளார்.
திடீரென, ''ஈழத்தமிழர்களை வாழ்த்தி கோஷமிட்டும், அவர்களை காப்பாற்ற கோரியும், இலங்கை அதிபர் ராஜபக்சேயை கண்டித்து கோஷமிட்டபடி மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீயை பற்ற வைத்தார். உடல் முழுக்க தீ பற்றி எரிய அவர் சாஸ்திரி பவனுக்குள் அங்கும் இங்கும் அலறியபடி ஓடினார்.
அங்கு நின்றிருந்த பொதுமக்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே உடல் முழுவதும் தீ எரிந்த நிலையில் முத்துக்குமரன் ஒரு இடத்தில் சாய்ந்து விழுந்தார். அவர் மீது எரிந்துக் கொண்டிருந்த தீ அணைக்கப்பட்டது.உடனடியாக அவரை மீட்ட காவல்துறையினர் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பயனின்றி மரணமடைந்தார்.
தீக்குளித்து இறந்த முத்துக்குமரன், சென்னை கொளத்தூர் மக்கான் தோட்டம் திருவள்ளுவர் தெருவில் வசித்து வந்துள்ளார். இவரது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் புலியநல்லூர் என்ற கிராமம் ஆகும். 'மக்கள் தொலைக்காட்சியில் பணிபுரிபவர், 'பெண்னே நீ|| என்ற நிகழ்ச்சி தொகுப்பளாரும் தயாரிப்பாளரும் ஆவார்.
தியாகி முத்துக்குமாரை நினைந்து பிரான்ஸில் மக்கள் அஞ்சலி
[ வெள்ளிக்கிழமை, 30 சனவரி 2009, 02:52.21 AM GMT +05:30 ]
தமிழ் நாட்டின் தலைநகரான சென்னை நுங்கம் பாக்கத்திலுள்ள மத்திய அரசு அலுவலகமான சாஸ்திரிபவன் முன்பாக, நேற்று வியாழக்கிழமை காலை, பத்திரிகையாளரான முத்துக்குமார் அவர்கள் ஈழத் தமிழ் மக்களுக்கு விடிவு வரவேண்டும், தமிழ் மக்கள் சொந்த மண்ணில் நிம்மதியாக வாழவேண்டும் போன்ற 11 அம்சக் கோரிக்கைகளை இந்திய அரசிடம் முன்வைத்து, தீக்குளித்து தன்னுயிரைத் தியாகம் செய்தார்.
இந்த சம்பவத்தை அடுத்து, நூற்றுக் கணக்கான பிரஞ்சுத் தமிழ் மக்கள் வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் பாரிஸ் நகரத்திலுள்ள லாச்சப்பல் பகுதியில் ஒன்று கூடி, ஈழத்தமிழ் மக்களுக்காக தன்னுயிரைத் தியாகம் செய்த தியாகி. முத்துக்குமார் அவர்களை நினைந்து, அவரது உயிர்த் தியாகத்திற்கு தலை சாய்த்து அஞ்சலி நிகழ்வை மேற்கொண்டிருந்தனர்.
இதே நேரம் இன்று வெள்ளிக்கிழமை பிரான்சின் பாரிஸ் நகரத்திலுள்ள, உலக அதிசயங்களுள் ஒன்றான ஈகிள் கோபுர முன்றலில் உண்ணாநோன்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கின்றது.
அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்று குவிக்கும் நடவடிக்கையில் சிறிலங்கா அரசும், இராணுவமும் முனைப்புக் காட்டி நிற்கிறது. இந்த சம்பவங்களை சர்வதேசத்திற்கு எடுத்துக் கூறும் வகையிலேயே, உலக அதிசயம் முன்பாக உண்ணா நோன்பு நடவடிக்கை ஓர் ஈழத்தமிழ் உணர்வாளரால் மேற்கொள்ளப்படவிருக்கின்றது.
ஈழத் தமிழர்களுக்காக உயிர்க்கொடை செய்த முத்துக்குமாருக்கு அரசியல் தலைவர்கள் வணக்கம்
[வெள்ளிக்கிழமை, 30 சனவரி 2009, 01:20 பி.ப ஈழம்] [ந.ரகுராம்]
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வலியுறுத்தி சென்னையில் நேற்று தீக்குளித்து உயிர்க்கொடை செய்த இளைஞர் முத்துக்குமாருக்கு அரசியல் தலைவர்கள், மாணவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் வணக்கம் செலுத்தி வருகின்றனர்.
முத்துகுமாரின் புகழுடலுக்கு நேற்று வியாழக்கிழமை மாலை
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் இராமதாஸ், தலைவர் கோ.க.மணி
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன்
திராவிட இயக்க தமிழர் பேரவையின் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்
திரைப்பட நடிகர் டி.இராஜேந்தர்
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன்
பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலர் தமிழிசை சௌந்தரராஜன்
உட்பட ஏராளமானவர்கள் வணக்கம் செலுத்தினர்.
முத்துக்குமாரின் உயிர் தியாகத்தை கௌரவிக்க வேண்டும் என்பதற்காக புரட்சிகர இளைஞர் முன்னணி, பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் இயக்க தமிழர் பேரவை உட்பட ஏராளமான தமிழ் அமைப்புக்கள் விரிவான ஏற்பாடுகள் செய்துள்ளன.
முத்துக்குமாரின் புகழுடலுக்கு அனைத்துத் தரப்பினரும் வணக்கம் செலுத்துவதற்காக வசதியாக கொளத்தூர் வியாபாரிகள் சங்க கட்டடம் முன்பு பெரிய மேடை அமைக்கப்பட்டது.
நேற்றிரவு அந்த மேடைக்கு முத்துக்குமாரின் புகழுடல் எடுத்து வரப்பட்டு குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டது.
சென்னையில் உள்ள கல்லூரி மாணவர்கள் திரளாக வந்து முத்துக்குமாரின் புகழுடலுக்கு இன்று வணக்கம் செலுத்தினர். செங்கல்பட்டில் 7 நாட்கள் உண்ணாநிலைப் போராட்டம் நடத்திய சட்டக் கல்லூரி மாணவர்களும் வணக்கம் செலுத்தினர்.
இதேபோல் பல்வேறு கட்சித் தலைவர்கள் முத்துக்குமாரின் புகழுடலுக்கு மலர் வணக்கம் செலுத்தினர்.
விஜயகாந்த் கட்சி சார்பில் சுதீஷ் 100 பேருடன் வந்து மலர் வளையம் வைத்து வணக்கம் செலுத்தினார்.
முத்துக்குமாரின் உயிர் தியாகத்துக்கு மரியாதை செலுத்தும் வகையில் கொளத்தூர், பெரம்பூரில் சில இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டன.
இன்று மாலை முத்துக்குமாரின் புகழுடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்படுகிறது.

எனது தந்தை தாம்பரத்தில் பழைய இரும்புக்கடை வைத்துள்ளார். எனக்கும் அவருக்கும் பேச்சுவார்த்தை கிடையாது.
எனவே நான் கொளத்தூரில் உள்ள எனது சகோதரி தமிழரசியுடன் வசித்து வருகிறேன். இலங்கையில் தமிழ் இனம் சிறக்க வேண்டும்.
மத்திய அரசு இலங்கை பிரச்சினையில் குருடு ஆகிவிட்டது. அதன் கண்களை திறப்பதற்காவே எனது உடலில் தீ வைத்துக்கொண்டேன்.
வேறு எங்கும் தீக்குளித்தால் சாதாரணமாக விட்டு விடுவார்கள். எனவே தான் மத்திய அரசு அலுவலகத்துக்குள் சென்று தீக்குளித்தேன்.
இலங்கை தமிழர்களை காப்பாற்ற தமிழ்நாட்டில் பெரிய அலை கிளம்பி உள்ளது. எனினும் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஈழத் தமிழர்களில் நிறைய புத்திசாலிகள் இருக்கின்றனர். அவர்கள் பலியாவது வேதனையாக இருக்கிறது.
அண்ணன் பிரபாகரனுக்கு உடனடியாக தகவல் தெரிவியுங்கள். திருமாவளவனுக்கும் தகவல் கொடுங்கள். பிரபாகரன் கில்லாடி. எப்படியாவது நான் எரிந்து கொண்ட தகவலை தெரிந்து கொள்வார் என முத்துக்குமார் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு முத்துக்குமார் விநியோகித்த துண்டுப்பிரசுரம் விபரம் வருமாறு:
விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை...
அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே...
வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன்.
உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன்.
வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த இரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்?
ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பழிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம்.
ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப் புலிகள் மட்டும் குற்றம் சாட்டப்படவில்லை. தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம் சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ் காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா?
ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத்தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா? கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா? ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப்பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்க போகவில்லை என்பது போன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன.
மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா? பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்?
கலைஞரா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(?!). பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் - இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல.
காகிதம் எதையும் சாதிக்காது மக்களே! இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன? ஒருமுறை அவரே சொன்னார், ''தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா"னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே...
பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே... உங்கள் போராட்டம் வெற்றிபெற சக தமிழனாக நின்று வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்சினை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள், வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான்.
உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழி வகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம். உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்கையெடுப்பவர்களாக இருந்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.
ஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டு விடாதீர்கள். போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம்
போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம்.
உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய இராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்! விடுதலைப் புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள்! போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் இராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை இராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது - இந்தக் கூட்டணி கொள்கைக்க்கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா!, ஆக இந்திய - இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புக்களையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள்.
இதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கள் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆட்பலம், பணபலம், அதிகார வெற்றியை உடைத்து எறியுங்கள். உங்களால் மட்டுமே இது முடியும். ‘நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதி கொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம். எங்கள் தமிழர்க்கு இன்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்’ என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள். எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே.. உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். காரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள்? எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத் தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?
தமிழீழம் என்பது தமீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட காரணம், இராமேஸ்வரம் மீனவர்கள், உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத் தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள்? எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா? சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்தவர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமென்றா, வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழி தவறுவது நம்புவது மாதிரியில்லையாமா?
தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே...
உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம். ஈழத்திலிருந்துக்கும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்திதான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது. அப்படி ஆக்கக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள். அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.
தமிழ்நாடு காவல்துறையிலிருக்கும் இளைஞர்களே...
உங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம், தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான். மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம்? உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது. டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக பொலிஸ்தான். இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம்! மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப்போகையில், சென்னை விமான நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள்.
ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். ராஜீவ் காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி பொலிஸ்காரர்கள் என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்காப்பாற்பட்டது. ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் - அதுதான், இந்திய உளவுத்துறை - ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா... இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த
இந்த தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப் பாருங்கள். மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்கு கோயில் கட்டி. தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத் தமிழன். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.
களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப் புலிகளே...
அனைத்துக்கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த் தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே... ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான். தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள். 1965 இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.
அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைகுரிய ஒபாமாவே,
உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இன ஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம். உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று... நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது. ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா?
வன்னியில், விடுதலைப் புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்? இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப் புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு. இது இனப்படுகொலை இல்லையா? இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொள்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை? ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார். மறத்திற்கும் அஃதே துணை என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளூவர்.
புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா - என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் அடுத்ததால்தான் வந்தது என்பதைப் போல.. உணமையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர் (they are not the reason: just an outcome)
இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது. சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச் சொன்னது.
நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய, மும்பை தொடர் வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொன்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொண்று குவிக்கிறது. அப்படியானால், பாகிஸ்தானின் இந்திய மீதான பயங்கரவாதமென்பது இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான் சண்டை என்கிறது.
ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது. ராஜீவ் காந்தி ஒரு கவுன்சிலரோ, மாவட்டச் செயலாளரோ அல்ல. அவரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை. ராஜீவ் காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று.
ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறு தெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.
இந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது? புலிகள் போர் நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை. இவர்கள் ஒரு நிர்ப்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டார்கள் என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம்? தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளை-ஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை.
உதாரணம் ரணில்- கருணா. ஆனால், புலிகள் போர் நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானே- ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா?
அப்பாவித் தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா. ஆயுத தளபாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்... வேலிக்கு ஓணான் சாட்சி! இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப் புலிகளா? பிரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப் புலிகளா? சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல... இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்-நியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா? அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்... எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை. அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே. ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும்கூட, விடுதலைப் புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.
காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியை விடக் கொடுமையானது. 1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும். 2. ஐ.நா. பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது. 3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள் மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். 4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். 5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும். 6. ராஜீவ் காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம் காணப்பட வேண்டும். 7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனிலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும். 8. அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள். 9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்து வந்த தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது. 10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்கும் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக பொலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும். 11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். 12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். 13. தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத் தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும். 14. சுட்டுக்கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும். என்றும் அன்புடன், அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன், கு.முத்துக்குமார், கொளத்தூர், சென்னை-99 அருமைத்திமிழ் மக்களே, அநீதிகளுக்கெதிரான போராட்டத்தில் நம் சகோதர்களும், பிள்ளைகளும் அறிவாயுதம் ஏந்தியிருக்கிறார்கள். நான் உயிராயுதம் ஏந்தியிருக்கிறேன். நீங்கள் நகலாயுதம் ஏந்துங்கள். ஆம், உங்கள் கையில் கிடைத்திருக்கும் இந்தத் துண்டறிக்கையை நகலெடுத்து, உங்கள் நண்பர்கள், உறவினர்கள், மாணவர்கள் வசம் கொடுத்து, போராட்டத்திற்கான ஆதரவைப் பெருகப் பண்ணுங்கள் நன்றி. இவ்வாறு அந்த துண்டுப்பிரசுர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Monday, April 6, 2009
[]பாதுகாப்பு வலயம் மீதான தாக்குதலை எதிர்த்து புலம்பெயர் தமிழர் கிளர்ந்தெழ வேண்டும் : பழ.நெடுமாறன்
பாதுகாப்பு வலயம் மீதான தாக்குதலை எதிர்த்து புலம்பெயர் தமிழர் கிளர்ந்தெழ வேண்டும் : பழ.நெடுமாறன்
வீரகேசரி இணையம் 4/6/2009 4:32:34 PM - வன்னியில் பாதுகாப்பு வலயம் மீது படையினர் நடத்தும் தாக்குதலுக்கு எதிராக புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் அனைவருமே கிளர்ந்தெழ வேண்டும் என பழ. நெடுமாறன் அழைப்பு விடுத்துள்ளார். மாத்தளன், பொக்கணை, வலைஞர்மடம், இரட்டை வாய்க்கால் போன்ற கிராமங்களை உள்ளடக்கிய பாதுகாப்பு வலயத்தில் லட்சக்கணக்கான மக்கள் தங்கியிருப்பதால், படையினர் தாக்குதலைத் தொடுத்தால் அவர்களே உயிரிழக்க நேரிடும் எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது. பாதுகாப்பு வலயம் மீதான தாக்குதலுக்கு முன்னோடியாகவே, தமிழீழ விடுதலைப் புலிகள் இந்தப் பகுதிகளுக்குள் மக்களோடு மக்களாக ஊடுருவியிருப்பதாகவும், மக்களைக் காப்பாற்றும் நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள இருப்பதாகவும் படையினர் அனைத்துலகின் நாடிபிடிக்கும் முன்னோடி அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளனர். எதிர்வரும் 16ஆம் நாள் இந்திய பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையிலும், தமிழ்-சிங்கள புத்தாண்டு நெருங்கி வருவதாலும், அதற்கு முன்னர் விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்க வேண்டும் என நினைக்கும் இந்திய, இலங்கை அரசுகள் அடுத்த சில நாட்களில் பாதுகாப்பு வலயம் மீதான தாக்குதலை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளன. இந்தியத் தேர்தலுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி தலைமையிலான இந்திய அரசாங்கம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இலங்கை அரசுக்கு உத்தரவு பிறப்பித்திருந்ததாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. வன்னியில் இலங்கைப் படையினர் மேற்கொள்ளும் தாக்குதலின் பின்னணியிலும், நேரடியாகவும் இந்திய அரசாங்கமும், படையினரும் முழு அளவில் இருப்பதாக, தமிழீழ ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் பழ.நெடுமாறனும், தமிழ் மக்களுக்கு சுய நிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்திவரும் ஒரேயொரு சிங்கள கட்சியான இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்னவும் ஆணித்தரமாக வலியுறுத்திக் கூறியிருந்தனர். இந்த நிலையில் இலங்கை படையினரது தாக்குதல் முனைப்பு பற்றி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் கருத்து வெளியிட்டுள்ள பழ.நெடுமாறன், தாக்குதல் முனைப்பு உண்மையாக இருந்தால், பல்லாயிரக்கணக்கில் உயிரிழப்பு ஏற்பட நேரிடும் என்பதால், இதனைத் தடுத்து நிறுத்த உடனடியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், தமிழ்நாடு, மற்றும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு இது தொடர்பான தார்மீகக் கடமை இருப்பதாகவும் குறிப்பிட்டார். புலம்பெயர்ந்த தமிழர்கள் தாம் வாழும் நாடுகளின் அரசுகளுக்கு இந்தத் தகவலை உடனடியாகக் கொண்டு சென்று, இலங்கை அரசை வலியுறுத்த அனைத்துலக சமூகத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் பழ.நெடுமாறன் அழைப்பு விடுத்துள்ளார்.

[]இடம்பெயர்ந்து வந்தவர்கள் இரண்டாம்தர குடிமக்களா?
இடம்பெயர்ந்து வந்தவர்கள் இரண்டாம்தர குடிமக்களா?
வீரகேசரி வாரவெளியீடு 4/6/2009 12:11:53 PM - வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிர தேசத்தில் இருந்து அரச கட்டுப்பாட்டுப் பகு திக்குள் வந்த மக்களின் மொத்த எண்ணிக்கை 70ஆயிரத்தைத் தாண்டி விட்டதாக அரசாங்கத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசகட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரும் மக் களுக்கு நிம்மதியான வாழ்வும் நிலையான அமைதியும் கிடைக்கும் என்று அரசாங்கம் பிரசாரம் செய்து வருகின்றது.ஆனால் இன்னொரு புறத்தில் இந்த மக் களை நிரந்தரமாகவே இரண்டாந்தரக் குடிமக் களாகப் பிரித்துக் காட்டும் முயற்சிகளில் அரசாங்கம் இறங்கியிருக்கிறது. வன்னியில் இருந்து வெளியேறும் மக்களை "புலிகளின் பிடியில் இருந்து தப்பி வரும் மக் கள்' என்ற அடைமொழியுடன் பிரசாரத்துக்குப் பயன்படுத்தும் அரசாங்கம் அதே வகையான தொரு நிலைக்குள்தான், இங்கும் தள்ளுகி றோம் என்பதை மறந்து விடுகிறது. வன்னியில் இருந்து வரும் மக்கள் வவுனி யாவிலும், யாழ்ப்பாணத்திலும் அமைக்கப்பட் டிருக்கின்ற முகாம்களுக்குள் மட்டுமே அடைக் கப்படுகின்றனர். இங்கே "அடைக்கப்படுகின்றனர்' என்ற பதம் சிறைகளில் அடைக்கப்படுவது என்ப தற்கு எந்தவிததிலும் குறைவானதாக இருக்க முடியாது. ஒரு சிறைக்குள் இருப்பவர்கள் வெளியாரு டன் தொடர்பு கொள்வதற்கு, வெளியே செல் வதற்கு, அல்லது சுதந்திரமாக நடமாடுவதற்கு எவ்வாறு தடுக்கப்பட்டிருப்பார்களோ, அது போன்ற நிலை தான் வன்னியில் இருந்து வந்த மக்களுக்கும் உள்ளது. இடம்பெயர்ந்தோர் நலன்புரி முகாம்களில் இருப்பவர்கள் வெளியே செல்ல முடியாது. அவர்களின் உறவினர்கள் கூட உள்ளே சென்று பார்க்க முடியாதுள்ளது.ஐ.நா.வின் உதவித் திட்ட நிவாரணத்தைப் பெற்று சமைத்துச் சாப்பிட்டுவிட்டு அதற்குள் ளேயே முடங்கிக் கிடக்க வேண்டும். இதுவும் ஒரு சிறை வாழ்க்கை தான். சுற்றிவர இராணுவத்தினரும், பொலிஸா ரும் காவல். உள்ளேயும் அவர்கள் தாராளமாக நடமாடுவர். இந்த முகாம்களே இராணுவத்தின ரின் கட்டுப்பாட்டில் தான் இருந்தன.இதுபற்றி சர்வதேச அழுத்தங்கள் அதிகரிக் கத் தொடங்கிய பின்னர் தான் இராணுவத்தின ரின் பொறுப்பில் இருந்து விடுவித்து மீள்குடி யேற்ற அமைச்சின் பொறுப்பில் ஒப்படைத் திருப்பதாக அரசாங்கம் கூறியுள்ளது. இது பெயரளவுக்குத் தான் இருக்குமே தவிர நிச்சயம் படைத்தரப்பின் இறுக்கமான கட்டுப் பாட்டுக்குள் தான் முகாம்கள் இருக்கும். வன்னியில் இருந்து வரும் மக்களிடையே புலிகள் மறைந்திருக்கலாம். அவர்கள் இங்கு வந்து தாக்குதல்களை மேற்கொள்ளலாம் என்ற முன்னெச்சரிக்கையோடு படையினர் செயற் படுவதாக அரசாங்கம் கூறுகிறது.ஆனால் ஒரு சில புலிகளைப் பிடிக்க அர சாங்கம் 70 ஆயிரத்துக்கும் அதிகமான மக்க ளின் நலன்களை முடக்கிப் போட்டு அவர்க ளின் சுதந்திரமான அசைவுகளைக் கட்டுப்ப டுத்தி நடைப்பிணங்களாக்கி வைத்திருப்பது சரியானது தானா என்ற கேள்வி எழுகிறது. அரசாங்கத்தின் இடம்பெயர்ந்தோர் முகாம் கள் தொடர்பாக சர்வதேச மட்டத்தில் பெரும் விசனம் வெளியிடப்பட்டிருக்கிறது. அங்குள்ள மக்கள் படும் வேதனைகள் பற்றி சர்வதேச பிரதிநிதிகளே தமது கள ஆய்வு அறிக்கைகளில் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால் அரசாங்கம் தனது இறுக்கமான போக்கில் இருந்து தளரத் தயாராக இல்லை. அமைச்சர்கள், அரசாங்கத் தோடு இணங்கிச் செயற்படும் சில அரசியல்வாதிகள் மட்டும் இடம்பெயர்ந்தோர் முகாம்க ளைப் பார்வையிட முடியும் என்ற நிலை தான் காணப்படுகிறது. ஆனால் இவர்களின் காதுக ளுக்குள் அங்குள்ள மக்களின் பிரச்சினைகள் ஏறுவதற்கு வாய்ப்பில்லை. ஏனென்றால் இப்படியான பிரச்சினைகளை வெளியே சொல்வது அரசாங் கத்துக்கு, இலங்கை தேசத்துக் குச் செய்யும் துரோகமாக அவர்கள் பார்ப்பார்கள். வன்னியில் வாழ்ந்த மக் களை புலிகள் கட்டாயமாகத் தான் படைகளில் சேர்த்ததாக அரசாங்கம் கூறுகிறது. ஆனால் அப்படி கட்டாய மாக ஆட்சேர்ப்பு செய்யப் பட்டு, தப்பி வந்தவர்களைக் கூட அரசாங்கம் வவுனியாவில் புலிகளாகத் தான் பார்க்கிறது. இதை விடப் பரிதாபம் புலிகள் 55வயதுக் குட்பட்டோருக்கு கட்டாய பயிற்சி கொடுத்த தாக அரசாங்கமே சொல்கிறது. ஆனால் 55 வயதுக்கு மேற்பட்ட வயோதி பர்களைக் கூட அரசாங்கம் இடம்பெயர்ந் தோர் முகாம்களில் இருந்து வெளியே போக விடாமல் தடுத்து வைத்திருக்கிறது.கடந்த வாரம் தான் 60 வயதுக்கு மேற்பட் டோர் வெளியே சென்று வசிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இது இன்னமும் நடைமுறைக்கு வந்ததாகத் தெரியவில்லை. இவ்வாறாக இடம்பெயர்ந்து அரச கட்டுப் பாட்டுப் பகுதிக்குள் வந்த மக்களின் அடிப் படை உரிமைகள் மறுக்கப்பட்டு குறிப்பிட்ட முகாம்களுக்குள்ளேயே முடக்கப்பட்டு வாழும் அவலம் தான் காணப்படுகிறது. இந்த அடைபட்ட வாழ்வு எதுவரை நீடிக் கும் எவ்வளவு காலத்துக்குத் தொடரும் என் பதற்கு யாரும் உறுதியான பதில் சொல்வதாகத் தெரியவில்லை. இந்தநிலையில் தான் அரசாங்கம் வன்னி யில் இருந்து வந்த மக்கள் அனைவருக்குமே விசேட அடையாள அட்டையை வழங்கப் போவதாக மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க கூறியிருக்கிறார்.இது அந்த மக்களை அரசாங்கம் இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்த முற்படுகிறது என் பதற்கான அடையாளமாகவே தெரிகிறது. சில வருடங்களுக்கு முன்னர், வவுனியா வில் இருந்து கொழும்பு செல்வதற்கு தமிழ்மக் களுக்கு பாஸ் தேவைப்பட்டது. இதற்கெதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக் கில் இவ்வாறான பாஸ் நடைமுறை சட்ட விரோதமானதென்று உயர்நீதிமன்றம் தீர்ப் பளித்திருந்தது. ஆனால் அதே பாஸ் நடைமுறையை அர சாங்கம் 1996 ஆம் ஆண்டில் இருந்து யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேறுவோ ருக்காக நடைமுறைப்படுத்தி வருகிறது.அதைவிட அங்கு விசேட அடையாள அட்டை நடைமுறையும் இருக்கிறது. இது பற்றி எவரும் வழக்குத் தாக்கல் செய்ய முனையவில்லை. இப்போது வன்னி மக்களுக்கும் விசேட அடையாள அட்டை கொடுத்து அவர்களை ஏனைய மக்களிடத்தில் இருந்து பிரித்துக் காட் டும் இரண்டாந்தரக் குடிமக்களாகப் பிரகட னப்படுத்தும் முயற்சியில் அரசாங்கம் இறங்கி யிருக்கிறது.அனைவருக்கும் தேசிய அடையாள அட்டை முக்கியமானதாக இருக்கும் போது அதற்கு மாறாக விசேட அடையாள அட் டையையும் வைத்திருக்க வேண்டுமென நிர்ப்பந்திப்பது குறிப்பிட்ட மக்களை தரக் குறைவாகப் பார்ப்பதற்கே வழிவகுக்கும்.யாழ்ப்பாணத்தில் 10 வயதுக்கு மேற்பட்ட அனைவருமே விசேட அடையாள அட்டை யைப் பெற வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப் பட்டனர். 18வயதுக்கு உட்பட்டோரை படைகளில் சேர்த்தால் அது மிக மோசமான மனித உரிமை மீறலாக இருக்கும்போது 10வயதுச் சிறுவ னையே அடையாள அட்டையுடன் அலைய விடுவது மட்டும் மனித உரிமையை மதிக்கும் செயலாகுமா? தமிழ் மக்களை விடுவிப்பதற்காகப் போர் நடத்துவதாகவும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்தால் வசந்தம் வீசும் என்றும் சொல்லிக் கொள்ளும் அரசாங்கம் அந்த மக்களை நிரந் தரமாகவே புலிகளாக நோக்க வைக்கும் ஒரு காரியத்தை இப்போது செய்து கொண்டிருக் கிறது. இடம் பெயர்ந்து வந்த மக்களை பிரித்துக் காட்டும் விசேட அடையாள அட்டையை நடைமுறைக்குக் கொண்டு வரப்போவதாக அரசாங்கம் அறிவித்திருக்கின்ற நிலையில், மனித உரிமைகளுக்காக குரல் கொடுப்பதாகக் காட்டிக் கொள்ளும் எவருமே இது பற்றி கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.இது ஒன்றே இடம்பெயர்ந்து வந்த மக்க ளின் துயரங்கள் எவ்வளவு தூரம் மறைக்கப் பட்ட நிலையில் இருகிறது என்பதற்கு போதுமான சாட்சி.
[www.virakesari.lk]

[]வன்னியில் படையினர் எறிகணை, உலங்குவானூர்தி தாக்குதல்: இன்று (ஞாயிறு) 92 பொதுமக்கள் படுகொலை; 153 பேர் படுகாயம்
வன்னியில் படையினர் எறிகணை, உலங்குவானூர்தி தாக்குதல்: இன்று (ஞாயிறு) 92 பொதுமக்கள் படுகொலை; 153 பேர் படுகாயம்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 ஏப்ரல் 2009, 02:28.23 PM GMT +05:30 ]
வன்னியில் சிறிலங்கா படையினர் இன்றும் நடத்திய எறிகணை மற்றும் எம்ஐ-24 ரக உலங்குவானூர்தி தாக்குதல்களில் 30 சிறுவர்கள் உட்பட 92 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 153 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மக்கள் பாதுகாப்பு வலயப் பகுதிகளான அம்பலவன்பொக்கணை, இடைக்காடு, மாத்தளன் மற்றும் இரட்டைவாய்க்கால் பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை தொடக்கம் மாலை வரை சிறிலங்கா படையினர் ஆட்லறி எறிகணை, பல்குழல் பீரங்கி, ஆர்பிஜி உந்துகணை மற்றும் எம்ஐ-24 ரக உலங்குவானூர்தி தாக்குதல்களை நடத்தினர்.
இதில் 30 சிறுவர்கள் உட்பட 92 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 153 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
அருணாசலம் ரவி (வயது 37)
அழகு மீனா (வயது 49)
ஆறுமுகம் சசீலா (வயது 18)
லோகநாதன் நிசாந்தினி (வயது 09)
வைரமுத்து செல்வரத்தினம் (வயது 50)
லௌசீகன் லேகா (வயது 23)
விசுவலிங்கம் கனகரத்தினம் (வயது 65)
பெரியாம்பிள்ளை சோபமலர் (வயது 67)
ரவிசங்கர் லவநிசா (வயது 02)
சத்தியானந்தன் சசிகலா (வயது 29)
வடிவேலு சந்திரலிங்கராசா (வயது 51)
ஐங்கரகுமார் நிதுசன வான்மதி (வயது 09)
ஜேம்ஸ் அந்தோனிப்பிள்ளை (வயது 50)
சின்னமணி இன்பநாதன் (வயது 47)
கந்தசாமி தியாகராசா (வயது 47)
தியாகராசா சங்கீதா (வயது 13)
வீரசிங்கம் தர்மலிங்கம் (வயது 56)
தில்லையம்பலம் திருச்செல்வம் (வயது 52)
ஜோசப் வேணுசன் (வயது 05)
தில்லைநாதன் சுமதி (வயது 38)
லோகநாதன் ஹேமா (வயது 32)
கலைவாணி (வயது 27)
லோகநாதன் லோஜிதா (வயது 09)
சிவதீபன் புஸ்பராணி (வயது 04)
சத்தியமூர்த்தி குணாளன் (வயது 09)
புலேந்திரன் விக்கினேஸ்வரி (வயது 42)
சி.கலைவாணன் (வயது 27)
துரைசிங்கம் (வயது 47)
கணபதிப்பிள்ளை சண்முகம் (வயது 61)
கஸ்தூரி (வயது 14)
விஜயரத்தினம் இரத்தினராசா (வயது 44)
முருகையா சிவனம்மா (வயது 64)
கருணாநிதி தர்சா (வயது 22)
மயில்வாகனம் குகேந்திரராசா (வயது 44)
கமலநாதன் ராதிகா (வயது 23)
மகேந்திரராசா கமலநாதன் (வயது 26)
குகேந்திரராசா ராஜலா (வயது 05)
கந்தசாமி தனுசன் (வயது 08)
ஆறுமுகம் கந்தசாமி (வயது 42)
சோதி (வயது 48)
தர்மேந்திரன் கார்த்திகா (வயது 06)
கே.தர்சன் (வயது 22)
எஸ்.சிவரூபன் (வயது 06)
வீ.இந்திரராஜா (வயது 40)
ஆர்.தியாகு (வயது 40)
கஸ்தூரி (வயது 16)
வீ.துரைசிங்கன் (வயது 47)
சத்தியமூர்த்தி குணாளன் (வயது 09)
வினோஜா (வயது 17)
கணபதிப்பிள்ளை சண்முகராஜா (வயது 58) விசுவலிங்கம் கனகரத்தினம் (வயது 65)
வீரசிங்கம் தர்மசிங்கம் (வயது 52)
வீரசிங்கம் இந்திரராஜா (வயது 42)
சின்னமணி இன்பநாதன் (வயது 47)
கந்தையா சிவபாதம் (வயது 50)
சிவபாதம் மோகன்ராஜ் (வயது 25)
சிவபாதம் தர்மராஜ் (வயது 23)
மோகன்ராஜ் ராதிகா (வயது 24)
பாலச்சந்திரன் தர்சன் (வயது 08)
சத்தியமூர்த்தி குணாளன் (வயது 10)
நாகலிங்கம் பாலகிருஸ்ணன் (வயது 42)
மயில்வாகனம் குகேந்திரராசா (வயது 44)
குகேந்திரராசா ராஜனா (வயது 13)
அன்ரன் லோசன் ரேகா (வயது 03)
சின்னமணி இன்பராசா (வயது 47)
சசிகுமார் தேவபாக்கியம் (வயது 51)
ஐங்கரன் நிருசன் வான்மதி (வயது 09)
தில்லையம்பலம் திருச்செல்வம் (வயது 04)
சிவதீபன் புஸ்பராணி (வயது 32)
குகேந்திரராசா (வயது 46)
விஜயரட்ணம் இந்திரராசா (வயது 46)
மரியநாயகம் கதீசன் (வயது 21)
பாலகுமார் பாதூசன் (வயது 05)
மயில்வாகனம தேவநேசன் (வயது 14)
கனியமுதன் கவிஞன் (வயது 16)
வைரமுத்து காருண்யன் (வயது 12)
வைரவன் துரைசிங்கம் (வயது 42)
காந்தி மதியமலர் (வயது 29)
கலாதீபன் விதுசனா (வயது 08)
தேவன் பவிசா (வயது 09) 80
கண்ணாளன் காவியா (வயது 13)
வேணுகாந்தன் யோகாம்பாள் (வயது 40)
கலைத்தேவன் ரேணுகா (வயது 35)
இன்பநாதன் சின்னராசா (வயது 44)
அந்தோனி ஜோசப் மரியநாயகம் (வயது 52)
கதிர்வேலு மருதம்மா (வயது 52)
கதிரித்தம்பி பவிசனா (வயது 11)
நாகமணி துசாந்தன் (வயது 12) ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

[]ஈழத்தில் அல்லலுறும் மக்களிடமிருந்து தாய்த் தமிழக மக்கள் மற்றும் தலைவர்களுக்கு ஓர் அவசர வேண்டுகோள்
ஈழத்தில் அல்லலுறும் மக்களிடமிருந்து தாய்த் தமிழக மக்கள் மற்றும் தலைவர்களுக்கு ஓர் அவசர வேண்டுகோள்
[ திங்கட்கிழமை, 06 ஏப்ரல் 2009, 01:08.42 PM GMT +05:30 ]
எமது அன்பான தமிழக உறவுகள் மற்றும் தலைவர்களே! வாழ்வா சாவா என்ற இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நாம் இப்போது எங்களைக் காப்பாற்றுவதற்கான இறுதி ஆயுதமாக உங்கள் உதவியை நாடி நிற்கிறோம்.
குறுகிய பிரதேசத்திற்குள் முடக்கப்பட்டிருக்கும் எமக்கு எதிராக தரைவழியிலிருந்து ஐந்து முனைகளில் இலங்கை ஆக்கிரமிப்பு இராணுவத்தினரும், மக்கள் வாழ்கின்ற கடலோரப் பகுதிக்கு அண்மையில் இருந்து இலங்கை கடற்படையும் இந்தியக் கடற்படையும் கூட்டுச் சேர்ந்து செய்து வருகிற தொடர் தாக்குதல்களால் பெருமளவான மக்கள் செத்துக் கொண்டும் காயமடைந்து கொண்டும் இருக்கிறார்கள்.
எஞ்சியிருக்கிற உயிர்களைக் காப்பபாற்ற நடவடிக்கை எடுக்குமாறு எமது தொப்புள்கொடி உறவுகளிடமும் மற்றும் தலைவர்களிடமும் அவசர வேண்டுகோள் விடுக்கின்றோம்.
இப்போராட்டமானது தமிழ்நாட்டையும் இந்தியாவையும் உலுக்கும் வகையிலும் அவசரப் போர்நிறுத்தம் ஏற்படும் வகையிலும் பாரிய ஆர்ப்பாட்டங்கள், இந்திய மத்திய அரச திணைக்களங்களை முற்றுகையிடும் வகையிலும் தமிழ் நாட்டு இளைஞர்களை தட்டி எழுப்பும் வகையிலும் உடனடி பேரணிகள் கதவடைப்பு அல்லது ஒன்றுகூடல்கள் ஏற்பாடு செய்து எம்மைக் காப்பாற்ற அழுத்தம் கொடுக்குமாறு பேரன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
நீங்கள் தாமதிக்கும் ஒவ்வொரு வினாடியும் எங்களில் பலரை நாம் இழந்துவிடுவோம். தயவு செய்து தாமதிக்காமல் எமக்காக வீதிக்கு வாருங்கள்.
எங்கள் உயிர் உங்கள் கைகளில் உறவுகளே!
இப்படிக்கு சாவின் விளிம்பில் உள்ள உங்கள் தொப்புள்கொடி உறவுகள்

Subscribe to:
Posts (Atom)